BSNL நிறுவனத்திற்கு 6724 கோடி ரூபாய்<<<Click Here>>>
Wednesday, 15 January 2014
Monday, 13 January 2014
Saturday, 11 January 2014
அனைவருக்கும் இனிய தமிழ் தை புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....
மார்கழி தை இனைக்கும் இன்நாள்
நல் உறவுகளை ஒன்றினைக்கும்
நன் நாளாக கொண்டாட
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.......
வான் பொழிந்து சூரியஒளி அளித்து
மண்சுமக்க கரும்பு இனிக்க இயற்கை தந்த பரிசு
புன்னகை மட்டுமே பெரிசு
இல்லம் தோரும் பொங்கட்டும் பொங்கலில் இருந்து
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.......
உழவரின் உன்னத திருநாள்
மடியை கசக்கினாலும் உதிரத்தை உணவாக்கும்
பசுவுக்கு பரிவுடன் உழவர் தின நல் வாழ்த்துக்கள்......
தமிழினம் ஒன்றுபட பொங்குக பொங்கல்
வாழ்த்துக்களுடன்.....
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்
நல் உறவுகளை ஒன்றினைக்கும்
நன் நாளாக கொண்டாட
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.......
வான் பொழிந்து சூரியஒளி அளித்து
மண்சுமக்க கரும்பு இனிக்க இயற்கை தந்த பரிசு
புன்னகை மட்டுமே பெரிசு
இல்லம் தோரும் பொங்கட்டும் பொங்கலில் இருந்து
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.......
உழவரின் உன்னத திருநாள்
மடியை கசக்கினாலும் உதிரத்தை உணவாக்கும்
பசுவுக்கு பரிவுடன் உழவர் தின நல் வாழ்த்துக்கள்......
தமிழினம் ஒன்றுபட பொங்குக பொங்கல்
வாழ்த்துக்களுடன்.....
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்
Friday, 10 January 2014
ஸ்பெக்ட்ரம் கட்டணத்தைத் திருப்பித் தர அமைச்சரவைக்குழுக் கூட்டம் முடிவு
MTNL for 4G
SPECTRUM SURRENDER
ஸ்பெக்ட்ரம் கட்டணத்தைத் திருப்பித் தர
அமைச்சரவைக்குழுக் கூட்டம் முடிவு
9.1.2014 அன்று நிதிஅமைச்சர் திரு. ப. சிதமபரம்
தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்குழுக் கூட்டத்தில், BSNL மற்றும் MTSNL நிறுவனங்களின்
புத்தாக்கத்திற்குப் பயன்படும் என்பதால், BSNLக்கு ரூ.6724.51 கோடியும் MTNLக்கு ரூ. 4533.97 கோடியும்
திருப்பித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
பார்க்க படிக்க<<<Click Here>>>
1961 - கோவா விடுதலையான நாள்
டிசம்பர் 19, 1961 - கோவா விடுதலையான நாள்
இன்றைய
கோவா மாநிலம் போர்ச்சுகீசியர்களின் பிடியில் சுமார் 450 ஆண்டுகளாக இருந்தது. இடையில் 1812-1815 காலகட்டத்தில் பிரிட்டிஸாரால்
கைப்பற்றப்பட்டது. 1961-ல் இதே நாளில்தான் இந்தியாவோடு இணைந்தது.
1947-ல்இந்தியா பிரிட்டிஸாரிடமிருந்து
சுதந்திரம் பெற்றது. அதற்குப் பிறகும் போர்ச்சு கல் நாடு இந்தியாவில், தான் பிடித்து வைத்திருந்த
பகுதிகளிலிருந்து வெளி யேற மறுத்தது.
அதனால், இந்தியா 1961 டிசம்பர் 12-ல் ‘ஆபரேஷன் விஜய்’ எனும் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. கோவா,டாமன் மற்றும் டையூவை போர்ச்சு
கீசியர்களின் பிடியில் இருந்து மீட்டது. 1987 மே 30-ல் கோவா இந்தியாவின் 25-வது மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. டாமன் மற்றும் டையூ இரண்டும்
யூனியன் பிரதேசங்களாகத் தொடர்கின்றன.
360
கோடி
ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்த கடினப் பாறைகள் கோவாவில் கண்டறியப்பட்டுள்ளன. கோவா
தன் பரப்பில் 56.6
சதவீதப்
பகுதியில் காடுகளையும் மரங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவில் மிகக்குறைந்த அளவில்
பழங்குடியின மக்களைக் கொண்ட மாநிலமாகவும் கோவா உள்ளது
சுற்றுலாதான்
கோவாவின் முக்கியமான தொழில். இந்தி யாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 12 சதவீதம் பேர் விரும்பி
கோவாவுக்குச் செல்கின்றனர். 2004-ல் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வந்தனராம்.
இவர்களில் 4லட்சம் பேர் வெளிநாட்டினர்.
Thursday, 9 January 2014
20.01.2014 அன்று போன் மெக்கானிக் பயிற்ச்சி வகுப்புகள் RGMTTC சென்னையில் நடைபெறுகிறது
போன் மெக்கானிக் பயிற்ச்சி வகுப்புகள் 20.01.2014
பயிற்ச்சி வகுப்புகள் துவக்கம்
தேதி : 20.01.2014 (திங்கள் முதல்)
காலம்: 4-வாரங்கள்
இடம்: மீனம்பாக்கம்(RGMTTC)சென்னை-16
போன் மெக்கானிக் பயிற்ச்சி பெறும் அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தஞ்சைBSNLEU மாவட்ட சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.
Wednesday, 8 January 2014
தோழர் ப.அபிமன்யு அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பி.எஸ்.என்.எல் கருத்தரங்கம்
உழைக்கும் போராளிக்கு உன்மையாக உழைக்கும் எழுச்சியுள்ள எங்கள் அன்பு தோழர் ப.அபிமன்யு அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பி.எஸ்.என்.எல் கருத்தரங்கம்
நமது அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் ப.அபிமன்யு அவர்களின் பணிநிறைவுப் பாராட்டுவிழா புகைப்படம்-1 பார்க்க:<<<Click Here>>>, புகைப்படம்-2<<<Click Here>>>
07-01-2014 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் பொதுச்
செயலர் பாசமிகு அன்புதோழர் ,ப.அபிமன்யு அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு விழாவும் மிக சிறப்பாக நடைப் பெற்றது நமது தஞ்சை மாவட்டத்தில் இருந்து அனைத்து தோழர்களும் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட
அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்
நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
கருத்தரங்கத்தின் பேசிய திரு.A.N.ராய் இயக்குனர்(மனிதவளம்) அவர்கள் ஆங்கிலத்தில் உரை ஆற்றினார் அதை நமது பொதுச் செயலாளர் தோழர் ப.அபி அவர்கள் தமிழில் எடுத்துரைத்தார் |
கருத்தரங்கத்தின் உருக்கமாக பேசிய BSNLEU அகில இந்திய பொதுச் செயலாளர் ப.அபி அவர்கள் |
நடைபெற்ற கருத்தரங்கத்தில் நமது பி. எஸ். என். எல் நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் திரு
A N .ராய் , இயக்குனர் (மனித வளம் ), திரு அஸ்ரப்கான், தலைமை பொது மேலாளர்
, தமிழகம் , பாலசுப்ரமணியம் , பொது மேலாளர் ,சென்னை வட்டம் ஆகியோர் கலந்து
கொண்டனர் திரு
A .N . ராய், இயக்குனர்( மனிதவள மேம்பாடு), அவர்கள் பேசிய போது
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வாடிக்கையாளர் அனைவர்க்கும் திருப்தியான சேவை செய்ய
வேண்டியதின் அவசியத்தையும் நிறுவனத்தை மீட்டு எடுக்க வேலையின் தன்மையில்
மாற்றம் ஏற்பட வேண்டிய அவசியத்தையும் கூறினார் .
நமது பொது செயலர் பேசும் போது வேலை கலாச்சாரம் மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியத்தை பல்வேறு உதாரணங்களுடன் சுட்டி காட்டினார் .பின்
நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் நமது பொது செயலரின் பல்வேறு கால
கட்டங்களில் நடைபெற்ற தொழிற் சங்க பணிகள் பற்றி நமது தலைவர்கள் தோழர்கள் V
.A .N .நம்பூதிரி ,CITU அகில இந்திய தலைவர் A .K .பத்மநாபன் , தமிழ் மாநில
செயலர் செல்லப்பா ,சென்னை தொலைபேசி மாநில செயலர் கோவிந்தராஜன் ,P .சம்பத்
,தீண்டாமை ஒழிப்பு முன்னணி , தோழர் M .முருகையா , ஒப்பந்த ஊழியர் சங்க
மாநில தலைவர் SNEA கோபிநாதன் , வள்ளிநாயகம் (FNTO ),சேவா BSNL ரவீந்திரன்
NFTE சங்க R .கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல தலைவர்கள் நினைவு கூர்ந்தனர் .நமது பொது செயலர் தோழர் ப.அபி அவர்கள் பயணித்த தடங்களில் நாம் அனைவரும் எலுச்சியுடன் பயணம் செய்வதே நாம் தோழர்அவர்களுக்கு அளிக்கும் வாழ்த்து செய்தியாகும் .
வாழ்த்துகளுடன்.....
தஞ்சை BSNLEU மாவட்டசங்கம்
Saturday, 4 January 2014
04.01.2014அன்று தஞ்சைமாவட்ட BSNLEU செயற்குழு கூட்டம் நடை பெற்றது
அன்புள்ள தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
04.01.2014 அன்று தஞ்சை மாவட்ட BSNLEU செயற்குழு கூட்டம் தலைவர் தோழர் A.இருதயராஜ் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
செயற்குழுவை தோழர் மா.பழனியப்பன். மாவட்ட துனை தலைவர் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.மாவட்ட சங்க செயல்பாடு,கிளைகள் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் மாநில சங்க செய்திகள் அகில இந்திய சங்க செய்திகளை விரிவாக பேசினார்.
செயற்குழுவில் கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட 24 தோழர்கள் விவாதத்தில் கலந்து கொண்டார்கள் விவாதத்திற்க்கு பிறகு மாவட்ட செயலர் தொகுப்பு உரை வழங்கினார்.
கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது
* கிளைக் கூட்டங்கள் மாதா மாதம் நடத்தப்பட வேண்டும்.
* தொழிற்சங்க வகுப்பு நடத்தப்பட வேண்டும்.
*ஜனவரி 7-ல் சென்னையில் நடைப்பெறும் BSNL கன்வென்ஷனில் தஞ்சை மாவட்டத்திலிருந்து அனைத்து தோழர்களும் கலந்துக்கொள்ள வேண்டும்.
* CUSTOMER CARE -ல் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய பிளான் பற்றி தகுந்த பயிற்ச்சி அளிக்க வேண்டும்.
*தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து செல்டவர்களும் சரியான பராமரிப்பு இல்லாததால் டவர்சிக்னல் கிடைபதில் தாமதம் ஏற்படுகிறது இதை நிர்வாகத்தை வலியுருத்தி சரிசெய்ய வைப்பது.
*தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து CSC யிலும் வேலை நேரம் பற்றிய அறிவிப்பு பலகை வைப்பதற்க்கு நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். சரியான முறையில் வாடிக்கையாளர்களுக்கும்தெரியப்படுத்தவேண்டும்.
*ஒப்பந்த ஊழியர்களை புதிதாக சேர்பதை நிறுத்த வேண்டும்.
*ஒப்பந்த ஊழியர்களை புதிதாக சேர்பதை நிறுத்த வேண்டும்.
தோழர் மாவட்ட பொருளர் எஸ்.என்.செல்வராஜ் நன்றி கூறி முடித்து வைத்தார்.
தோழமையுடன்
தெ.சுப்ரமணியன்
தஞ்சைBSNLEU மாவட்ட செயலர்
Friday, 3 January 2014
BSNL-லில் 29.12.2013 , 13-வது அகில இந்திய அளவிலான பளூ தூக்கும் போட்டி போப்பாலில் நடைப்பெற்றது
13th All INDIA WEIGHT-LIFTING AND POWER LIFTING BEST PHYSIGUE -CHAMPIONSHIP(M.P.)BHOPAL.
திரு.எஸ்.விஜயகுமார்,DGM(CFA)அவர்கள்,திரு,எக்ஸ்.ஜான்ஸ்டீபன்தாஸ்,AGM(VIG),திருமதி.சி.பொன்னழகு,AGM(NWP) BSNL தஞ்சாவூர்.
வாழ்த்துகளுடன் மாவட்ட செயலர்
தெ.சுப்ரமணியன்
பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா புகைப்படம்
தோழர் P.அபிஅவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா <<<Click Here>>>
Thursday, 2 January 2014
Wednesday, 1 January 2014
IDA உயர்வு
IDA increase is 5% from 01-01-2014.
01-01-2014 முதல் IDA உயர்வு 5% ஆக இருக்கும்
It is learnt that the IDA increase, that has become due w.e.f. 01.01.2014 is 5%. With this IDA increase, the total IDA that has become payable from 01.01.2014 will be 90.5% (85.5% + 5 %).
Subscribe to:
Posts (Atom)