Tuesday 8 August 2017

போராட்டத்தை தவிர வேறுவழியில்லை ஓன்றுபட்டு போராடினால் வெற்றி நிச்சயம்

இறுதியில் DPE 3வது ஊதியதிருத்தம் செய்வதற்குண்டான உத்தரவை வெளியிட்டுவிட்டது. அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது லாபமீட்டும் கன்பெனிகளூக்கு மட்டுமே ஊதிய திருத்தம் நஷ்டம் அடைந்த நிறுவனங்களுக்கு இல்லையென்று  DPE தெளிவுபடுத்திவிட்டது. 

DIRECTOR (HR) வாரத்திற்கு ஒரு கடிதம் ஊழியர்களுக்கு எழுதினார் எப்படியம் BSNL ஊழியர்களுக்கு ,அதிகாரிகளூக்கு ஊதியதிருத்தம் கிடைத்துவிடும் CMD நமக்கு சாதகமாகவுள்ளார், DOT நமக்கு சாதகமாகவுள்ளது, துறை அமைச்சர் சாதகமாக உள்ளார். ஆகவே விரைவில் ஊதியதிருத்தம் வந்துவிடும் என்றும் போராடும் சங்கங்கள் மீது துஷ்பிரச்சாரம் செய்தார், தேவையில்லாமல் போராடுகிறார்கள் என்று பல விஷயங்களை சங்கங்களூக்கு எதிராக கடிதம் மூலம் தெரிவித்து வந்தார்.  ஒரு சிலசங்கங்களூம்  அதையே சொன்னது. அனைவரும் நமக்கு சாதகமாக‌ இருக்கிறார்கள் ஆகவே விரைவில் ஊதியதிருத்தம் வந்துவிடும் என்று பிரச்சாரம் செய்தார்கள்.
UNIONS AND ASSOCIATIONS தெளிவாக சொல்லியது AFFORDABILITY CLAUSE அதிலிருந்து BSNL க்கு விலககு அளிக்காதவரை நமக்கு ஊதியதிருத்தம் என்பதே இல்லை. ஆகவே அதை பெறுவதற்கு DOT /அரசை நிர்பந்திக்க‌ வேண்டுமென்றுதான் அனைத்து சங்கங்களோடு பேசி போராட்ட திட்டம் வகுக்கப்பட்டு தர்ணா, உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் சிறப்பாக நடைபெற்றுள்ளது ஒருசில சங்கங்கள் ஒதுங்கிகொண்டன.. 
UNIONS AND ASSOCIATIONS அடுத்த கடட போராட்டத்திற்கு திட்டமிடவுள்ளன. DOT க்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் அது தவறவிட்டது.   DOT நமக்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். DOT ஐ நிர்பந்தபடுத்தினால் இது முடியம அதற்கு ஒரு கடுமையான‌ போராட்டம் ஓன்றுபட்டு நடத்தினால்தான் இதை சாதிக்கமுடியும்.

ஓன்றுபடுவோம்!  போராடுவோம்!!  வெற்றிபெறுவோம்!!!

No comments:

Post a Comment