Wednesday 15 February 2017

GPF பட்டுவாடாவில் உள்ள சிரமங்களை போக்க….

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் அமைப்பு செயலாளர் தோழர் ரமேஷ் சந் ஆகியோர் 14.02.2017 அன்று டெலிகாம் கமிஷனின் MEMBER(FINANCE) திரு பிரகலாத் சிங் அவர்களை சந்தித்து BSNL ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் GPF கிடைப்பதில் உள்ள சிரமங்களை விவாதித்தனர். தற்போது BSNL நிர்வாகம் ஊழியர்களுக்கு GPF பணத்தை முதலில் வழங்கி விட்டு பின்னர் DOTயிலிருந்து திரும்ப பெறுகின்றனர். இந்த முறையில் GPF பணத்தை உரிய நேரத்தில் வழங்க BSNL வசம் போதுமான பணம் இல்லாத காரணத்தால் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். இந்த சிரமத்தைக் களைய, ஒவ்வொரு மாதமும் DOT முன்பணத்தை BSNLக்கு வழங்கி விட்டு, ஊழியர்களுக்கு GPF பட்டுவாடா முடிந்த உடன் அதனை சரி செய்து கொள்ளலாம் என்று BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே டெலிகாம் கமிஷனுக்கு ஆலோசனையாக தெரிவித்திருந்தது. 14.02.2017 அன்று இந்த ஆலோசனை டெலிகாம் கமிஷன் MEMBER(FINANCE) உடன் விவாதிக்கப்பட்டது. BSNL ஊழியர் சங்கத்தின் இந்த ஆலோசனையை வெகுவாக பாராட்டிய அவர், மேலும் இது தொடர்பாக BSNL மற்றும் DOT அதிகாரிகளுடன் விவாதிப்பதாக தெரிவித்தார். இந்தக் கூட்டத்திற்கு பின் நமது தலைவர்கள், BSNLன் GM(T&BFCI) திரு யஷ்வந்த நாராயன் சிங் அவர்களை சந்தித்து, இந்த தகவல்களை தெரிவித்து, இந்த பிரச்சனையை விரைவில் தீர்வு காண்பதற்கு, டெலிகாம் கமிஷனின் MEMBER(FINANCE) உடன் தொடர்ந்து விவாதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

No comments:

Post a Comment