மாநிலத் தலைவர் (AGS) தோழர் S.செல்லப்பா மற்றும் மாநிலச் செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன் மற்றும் ஆகியோர் இன்று (08.07.2015) தலைமைப் பொது மேலாளரை சந்தித்தனர். JTO காலிப்பணியிடங்களை உடனடியாக மறு கணக்கீடு செய்து கார்ப்பரேட் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று நமது தலைவர்கள் கோரினர். JTO காலிப்பணியிடங்கள் மறுகணக்கீடு செய்யப்பட்டு இன்னும் இரண்டு நாட்களில் கார்பரேட் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று தலைமைப் பொது மேலாளர் உறுதி கூறினார். எனினும் இதில் ஏற்பட்ட கால தாமதம் என்பது கவலைக்குறியது என குறிப்பிட்டோம். தலைமைப் பொது மேலாளர் அவர்கள் நமது உணர்வினை புரிந்துகொண்டு இப்பிரச்சனையில் விரைந்து நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார். மேலும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள BSNL சலுகைகள் சம்பந்தமாக மாவட்ட அளவில் செய்யவேண்டிய பணிகளை விளக்கி கடிதம் கொடுக்கப்பட்டது. மாவட்ட மட்டங்களில் நிர்வாகம் இதை விளம்பரப்படுத்துவதிலும் புதிய சந்தாதாரர்களை சேர்ப்பதிலும், நாகர்கோவில் நீங்கலாக எங்கும் வேகமாக செயல்படுவதில்லை என்ற ஆதங்கத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளோம். CGM அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்.
No comments:
Post a Comment