Friday 3 July 2015

ஹெல்மட் விற்பனையில் பகல் கொள்ளை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தூத்துக்குடி, ஜூலை 2 -இரு சக்கர வாகனத்தில் செல் பவர்கள் கட்டாயம் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அரசின் அரசாணை காரணமாக போதுமான கால அவகாசம் இல்லாததால் ஹெல்மட் தட்டுப்பாடும் காவல்துறையின் கெடுபிடி யையும் பயன்படுத்தி தரமற்ற ஹெல் மட் அநியாயமான விலைக்கு விற்கப் படுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.இரு சக்கர வாகனத்தில் செல் பவர்கள் கட்டாயம் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.இதனை அமல்படுத்த தமிழக அதிமுக அரசும் கடந்த 18ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.இரு சக்கர வாகனத்தை ஓட்டிசெல்பவரும், பின்னால் உட்கார்ந்து செல்லும் ஆண், பெண் அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிந்துசெல்ல வேண்டுமென அறிவித் துள்ளது.ஜூலை 1ந் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இது பற்றிகாவல்துறை அதிகாரிகளும் பரபரப் பான அறிக்கைகளும், வாகன ஓட்டி களிடம் பதற்றத்தை, ஏற்படுத்தி வரு கின்றனர்.ஹெல்மட் தட்டுப்பாடுதிடீரென குறைந்த நாள் அவகாசத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் கட் டாயம் ஹெல்மட் அணிந்து செல்லவேண்டுமென கெடுபிடி செய்வ தால் ஹெல்மட் தூத்துக்குடி மாவட் டத்தில் எங்கும் கிடைப்பது இல்லை. தரமற்ற ஹெல்மட் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது. ரூ.600, ரூ.800க்கு விற்கப்பட்டு வந்த ஹெல்மட் கெடுபிடி காரணமான ரூ.2000, ரூ.3000 என விற்று பகல் கொள்ளை அடிக்கப்படுகிறது. மேலும் ஹெல்மட் கிடைக்காததால் முன் பதிவு செய் யும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஹெல்மட் தட்டுப்பாட்டையும், காவல் துறையின் கெடுபிடியையும் பயன்படுத்தி அதிகமான வசூல் செய்யப் படுகிறது.உயர்நீதிமன்ற உத்தரவு போதுமான கால அவகாசம் கொடுக் காமல் அவசர கோலத்தில் அமல் படுத்தப்படுகிறது. தேவையான அளவிற்கு தரமான ஹெல்மட் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்யாமல் பகல் கொள்ளை நடைபெறுவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.இந்நிலையில் வாகன சோதனை என்ற பெயரில் அபராதம் விதிக்கப் படுவதும், வாகனத்தை காவல் நிலை யத்தில் நிறுத்தி விட்டு ஹெல்மட் வாங்கியதற்கு ரசீதும் ஹெல்மட்டும் காட்ட சொல்வது போன்ற கெடுபிடி களை செய்து வருகின்றனர். இதனால் பொது மக்கள் கடும் வேதனைக்கும், சோதனைக்கும் ஆளாகியுள்ளனர்.எனவே ஹெல்மட் கட்டாயம் அணிந்து வாகனத்தில் செல்வதை அமல்படுத்த போதுமான கால அவகாசம் வழங்கவும், தர மான ஹெல்மட் நியாயமான விலையில் கிடைப்பதை தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும், காவல்துறை யும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறது

No comments:

Post a Comment