Saturday, 28 January 2017

Contract workers March to Parliament on 22nd February, 2017 – Make it a grand success.


The BSNL Casual Contract Workers Federation (BSNLCCWF), is organising a March to the Parliament on 22nd February, 2017, to highlight the demands of the casual and contract workers. BSNLEU always remains in the forefront, in fighting against the injustices being meted out to the casual and contract workers. The 8th All India Conference of BSNLEU, held at Chennai, has given a call to the regular workers also to massively participate in this rally, and raise their voices in support of the demands of the casual and contract workers. The CHQ of BSNLEU has called upon the circle unions of BSNLEU, nearer to Delhi, to take special efforts to mobilise maximum number of regular employees in the rally. Let us make the March to Parliament a grand success. 
=A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR

Saturday, 21 January 2017

மத்திய மாநில அரசுகளே! தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கொடு!!!

தமிழர்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ள ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசியல் செய்யும் ஆட்சியாளர்களுக்கு எதிரான இளைஞர்களின் எழுச்சி! வெல்லட்டும் இளைஞர்களின் போராட்டம்!! ஆதரவுக் கரம் கொடுப்போம்!
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Friday, 13 January 2017

அரசு விடுமுறை கட்டாயமல்ல

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது அரசு விடுமுறை என்பது கட்டாயமல்ல என்று மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. தமிழக மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இன்று மீண்டும் பொங்கலுக்கு கட்டாய விடுமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழர்களை குறிவைத்து ஒடுக்கும் விதமாக அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. தற்போது பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் பொங்கள் பண்டிகைக்கு உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்றே விடுப்பு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உயர் அதிகாரிகள் விடுப்பு அளிக்க மறுக்கும் பட்சத்தில் கட்டாயமாக பணிக்கு செல்ல வேண்டும் என்று மோடி அரசு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டு ரீதியான விழாவை இருட்டடிப்பு செய்வதாக தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு தனது முடிவில் பின் வாங்கி உள்ளது. பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் இன்று மீண்டும் சேர்த்துள்ளது. தசரா விடுமுறைக்கு பதிலாக பொங்கல் விடுமுறை கட்டாய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Pongal Greetings

Pongal greetings 2017 jallikattu.jpg

Friday, 6 January 2017

BSNL ஊழியர் சங்க அனைத்திந்திய நிர்வாகிகளின் பட்டியல்

2016 டிசம்பர் 31 முதல் 2017 ஜனவரி 3 வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியல்

தலைவர்                                 : தோழர். பலபீர்சிங், பஞ்சாப் 

பொதுச்செயலாளர்               : தோழர். P .அபிமன்யு , தமிழ்நாடு 

உதவி பொதுச்செயலாளர்  : தோழர் S. செல்லப்பா, தமிழ்நாடு 

பொருளாளர்                         : தோழர் கோகுல் போரா , அஸ்ஸாம்  

தோழர்கள்  பணி சிறக்க எங்கள் தஞ்சை சங்கத்தின் வாழ்த்துக்கள் 

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Wednesday, 28 December 2016

BSNLEU கோரிக்கை சம்பள மாறுதல் சம்பந்தமாக கூட்டு கமிட்டீ அமைத்திடுக

இன்று Com.Swapan Chakraborty, Dy.GS,அவர்கள்   ms. Sujata Ray, Director(HR) ஐ சந்தித்து நிர்வாகத்தரப்பில் அமைக்க பட்டுள்ள சம்பள மாறுதல்கமிட்டீ எந்த பலனும் இருக்காது தொழிற் சங்க பிரதிநிதிகளை கொண்ட கூட்டு கமிட்டீ அமைத்திடுக என்று வலியுறுத்த பட்டது.Director(HR) பரிசீலிப்பதக உறுதி கூறினார். 

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Saturday, 17 December 2016

நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் பிரமாண்டமான வெற்றி!!!

BSNL நிறுவனத்தின் உயிர் நாடியாம் மொபைல் டவர்களை BSNLல் இருந்து தனியாக பிரித்தெடுத்து ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியினை எதிர்த்து BSNLல் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அனைத்து சங்கங்களும் விடுத்த 15.12.2016 ஒரு நாள் வேலை நிறுத்தம் மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும், அதிகாரிகளும் முழுமையாக பங்கேற்று இந்த வேலை நிறுத்தத்தை பிரமாண்டமான வெற்றியாக மாற்றியுள்ளார்கள். தமிழகத்திலும் சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் அதிகாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். BSNLஐ காப்பாற்ற நடைபெற்ற இந்த பிரமாண்டமான தேச பக்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட  BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த வேலை நிறுத்தம் வெற்றி பெற உழைத்திட்ட அனைத்து சங்க தலைவர்களுக்கும் களப்பணியாளர்களுக்கும் நமது வாழ்த்துக்கள். நமது கண்ணின் மணியாம் BSNL நிறுவனத்தை பாதுகாக்க அயராது உழைத்திடுவோம். அரசின் தனியார்மய முயற்சிகளை தடுத்திடுவோம்!!

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Monday, 12 December 2016

Friday, 9 December 2016

BSNL அதிகாரிகள் சங்க தேர்தல்

தஞ்சை மாவட்ட அதிகாரிகள் சங்க தேர்தலின் பதிவான ஓட்டுக்கள்
மொத்தம் = 113
AIBSNLEA  = 55
SNEA           = 51
AIBSNLOA =   6
BASE           =   1
அனைவருக்கும் வாழ்த்துக்களுடன்
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 


Thursday, 8 December 2016

நாகை மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி

1974-ல் தொடங்கிய காவிரி நீர்ப் பிரச்சனையில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் தொடர்ச்சியான-வலிமையான போராட்டங்களால், இடதுசாரிகள் ஆதரவோடு அமைந்திருந்த தேசிய முன்னணி ஆட்சியில் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.நடுவர் மன்றம் மூலம் கர்நாடகம், தமிழ்நாடு,கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் காவிரிப் பாசன விவசாயிகளின் நியாயமான தண்ணீர்த் தேவையை அறிந்து, 1992-ல் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டு, 2007-ல் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், உடனடியாக மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறியும், மத்திய பாஜக அரசு, அரசியல் காரணங்களுக்காக மறுத்து வருகிறது. இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையும் இதுவரை பெய்யாமல் காவிரி டெல்டா விவசாயிகள், ஏழை எளிய விவசாயிகள் சாகுபடி செய்த பயிர் கருகி வருவதைக் கண்டு, அதிர்ச்சியுற்று, மனமுடைந்து மாரடைப்பாலும் தற்கொலை செய்துகொண்டும் மாண்டு போகிறார்கள்.

இயற்கைச் சீற்றங்கள், வெள்ளம் வந்தாலும் வறட்சி வந்தாலும் புயல் வந்தாலும் சுனாமி வந்தாலும் கொள்ளை நோய்கள் வந்தாலும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய மத்திய-மாநில அரசுகள், வாய்மூடி மௌனிகளாக இருப்பது நியாயமானது இல்லை.இதுவரை நாகை மாவட்டத்தில் மட்டும் ஏழை எளிய விவசாயிகள் 10 பேர் மாண்டுள்ளனர் என்பது அதிர்ச்சியாக உள்ளது. குடும்பத் தலைவரை, தலைவியை இழந்து வாடும் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம், சாகுபடி செய்த நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்கி விவசாயிகளைப் பாதுகாத்திடக் கேட்டுக் கொள்கிறோம்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

திருச்சி கருத்தரங்கம்

BSNL ஊழியர் சங்கம் திருச்சி, தஞ்சை, குடந்தை மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் திறந்தவெளி கருத்தரங்கம் 17.12.2016 மாலை 0430 மணிக்கு PGM அலுவலகம்திருச்சியில் நடைபெறும் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளவும்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Tuesday, 6 December 2016

08.12.2016 திறந்தவெளி கருத்தரங்கம்

BSNL ஊழியர் சங்கம் திருச்சி, தஞ்சை, குடந்தை மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் திறந்தவெளி கருத்தரங்கம் அடுத்தவாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தேதி அறிவிக்கப்படும் 

 08.12.2016காலை அனைத்து கிளைகளிலும் கொடியேற்ற வேண்டும்


A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

தமிழக முதல்வர் செல்வி J.ஜெயலலிதா மரணம்

உடல் நலம் சரியில்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தின் முதல்வர் டாக்டர் J.ஜெயலலிதா அவர்கள் நேற்று (05.12.2016) காலமானார். தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த செல்வி ஜெயலலிதா அவர்கள், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு MGR மூலமாக அரசியலுக்கு வந்தார். நாடாளுமன்ற உறுப்பினர், அ.இ.அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளர் என பல பொறுப்புகளை வகித்தவர். MGR அவர்களின் மறைவிற்கு பின் அந்தக் கட்சிக்கு தலைமை தாங்கி செயல்பட்டவர். தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பொறுப்பு வகித்துள்ளார். அவரது மறைவிற்கு தஞ்சாவூர் மாவட்ட  BSNL ஊழியர் சங்கம் தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தஞ்சாவூர் மாவட்ட  சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

A .இருதயராஜ், மாவட்ட செயலாளர், தஞ்சாவூர் மாவட்டம்  

Monday, 5 December 2016

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் 60th Anniversary



மகாத்மா காந்திக்குப் பின் சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் யார் என்பது குறித்து மக்களிடம் நடத்திய வாக்கெடுப்பில், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு 2 கோடி பேர் வாக்களித்து, நாட்டின் ஒப்பற்ற தலைவர் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். ஆன்லைன், கள ஆய்வு மற்றும் நடுவர் வாக்குகள் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இவற்றில் அண்ணல் அம்பேத்கருக்கு 2 கோடி வாக்குகள் கிடைத்தன. தேசத்தின் ஒப்பற்ற தலைவர் அவரே என்பது பெருவாரியான மக்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கரை ஒரு தலித் சமுதாய தலைவராக, பிரதிநிதியாகப் பார்க்கக் கூடாது என்றும், அவர் இந்த நாட்டைக் கட்டமைத்த ஒப்பற்ற சிற்பி என்பதை ஒவ்வொரு இந்தியரும் மனதில் கொள்ள இது ஒரு வாய்ப்பு என்றும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR

Sunday, 4 December 2016

டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம். BSNLஐ காத்திடுவோம்!!!

15.12.2016அன்று நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு பணிகளில் உடனடியாக இறங்க வேண்டும் என மாநில, மாவட்ட சங்கங்களை மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில அளவில் அனைத்து சங்கங்களின் தலைவர்களை அணுகி விவாதிக்கப்பட்டது. அனைத்து சங்கங்களின் சார்பாக ஒரு சுற்றறிக்கையும், சுவரொட்டியும் தயாராகிக் கொண்டுள்ளது. அது விரைவில் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்ற அடிப்படையில் BSNL ஊழியர் சங்கத்தின் செயலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் முக்கிய பாத்திரத்தை வகித்திட வேண்டும். தல மட்டங்களில் அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து வேலை நிறுத்தத்திற்கான பணிகளை கூட்டாக செய்திட வேண்டும். அனைத்து அதிகாரிகள் சங்கங்களும், ஊழியர் சங்கங்களும் இருப்பதால் இந்த வேலை நிறுத்தம் சிறப்பாக நடைபெற்று விடும் என்று அசிரத்தையாக இருந்து விடக்கூடாது. மற்றவர்கள் முன்கையெடுப்பார்கள் என்றும் நாம் இருந்து விடக்கூடாது. BSNL ஊழியர் சங்கம் தான் முன்கையெடுக்க வேண்டும். பலமானதொரு அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக நாம் போராடுகிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு பலமான ஒன்று பட்ட போராட்டத்தின் மூலமாகவே துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்த முடியும். எனவே நூறு சதவிகித ஊழியர்களின் பங்கேற்பை வேலை நிறுத்தத்தில் உறுதி செய்ய வேண்டும். வேலை நிறுத்தம் நடைபெற குறுகிய கால அவகாசமே உள்ளது. அனைத்து சங்க உறுப்பினர்களையும் ஒன்றாக திரட்டி தலமட்டங்களிலே வேலை நிறுத்த தயாரிப்புக் கூட்டங்களை நடத்திட வேண்டும். சுற்றறிக்கை எண்.141 என தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ள மத்திய சங்கத்தின் சுற்றறிக்கையில் உள்ள விஷயங்களை பயன்படுத்தி மாவட்ட மட்டங்களில் தேவையான சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டும். ஊழியர்களையும் அதிகாரிகளையும் அவர்கள் பணியிடங்களுக்கே சென்று, தேவைப்பட்டால் அவரகளின் இல்லங்களுக்கும் சென்று சந்தித்து கோரிக்கைகளை விளக்கி பிரச்சாரம் செய்வதன் மூலம் டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம். BSNLஐ காத்திடுவோம்=A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR