Friday 13 January 2017

அரசு விடுமுறை கட்டாயமல்ல

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது அரசு விடுமுறை என்பது கட்டாயமல்ல என்று மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. தமிழக மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இன்று மீண்டும் பொங்கலுக்கு கட்டாய விடுமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழர்களை குறிவைத்து ஒடுக்கும் விதமாக அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. தற்போது பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் பொங்கள் பண்டிகைக்கு உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்றே விடுப்பு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உயர் அதிகாரிகள் விடுப்பு அளிக்க மறுக்கும் பட்சத்தில் கட்டாயமாக பணிக்கு செல்ல வேண்டும் என்று மோடி அரசு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டு ரீதியான விழாவை இருட்டடிப்பு செய்வதாக தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு தனது முடிவில் பின் வாங்கி உள்ளது. பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் இன்று மீண்டும் சேர்த்துள்ளது. தசரா விடுமுறைக்கு பதிலாக பொங்கல் விடுமுறை கட்டாய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

No comments:

Post a Comment