Monday 10 November 2014

7 ஆவது அகில இந்திய மாநாடு

          BSNLEUவின் 7 ஆவது அகில இந்திய மாநாடு அகில இந்தியத் தலைவர் தோழர் வி.ஏ.என்.நம்பூதிரி அவர்கள் தலைமையில் கொடியேற்றம் மற்றும் அஞ்சலியுடன் தொடங்கியது. வரவேற்புக் குழு தலைவர் தோழர் சிசில் பட்டாச்சார்யாவின் வரவேற்புரையைத் தொடர்ந்து சிஐடியுவின் அகில இந்திய பொதுச்செயலர் தோழர்ஏ.கே.பத்மநாபன் தொடக்க உரையாற்றினார்.
               
பொதுச் செயலாளர் தோழர் அபிமன்யுவின் எழுச்சியான தொடக்க உரையுடன் மாநாட்டின் முதல்நாள் தொடங்கியது. தபால் தந்தித் துறையின் தொழிற்சங்கத்திலிருந்து அதன் பொதுச் செயலாளர் தோழர் கிருஷ்ணன் மற்றும் அனைத்திந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் ரமேஷ் ஆகியோரின் வாழ்த்துரையைத் தொடர்ந்துதோழர் மோனி போஸ் குறித்த நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதனை திருமதி மோனிபோஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார். நமது துணைப் பொதுச் செயலர் தோழர் அனிமேஷ் மிஷ்ரா அவர்கள் காலை நிகழ்வுக்கு நன்றி கூறி முடித்து வைத்தார்.
             
பிற்பகல் நடைபெறுவதாக இருந்த பேரணிக்கு வழக்கமான காரணங்களைக்கூறி அரசாங்கம் அனுமதி தர மறுத்ததால், பொது அரங்காக கல்கத்தா அலியூர் டெலிகம் பேக்டரிக்கு முன்னால் பொதுஅரங்கம் நடைபெற்றது. பொது அரங்கில் தோழர் சக்ரவர்த்திமற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தபன் சென் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.


          மாநாட்டின் இரண்டாம் நாள் சார்பாளர்கள் நிகழ்வாகத் தொடங்கியது. சார்பாளர்கள் மாநாட்டின் தொடக்க உரையாற்றிய அகில இந்தியத் தலைவர் தோழர் வி.ஏ.என்.நம்பூதிரி நாம் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக மாறிய பின்னர் பெற்ற ஊதியப் பலன்களையும் நிறுத்தப்பட்ட சுற்றுலாப் பணம் மற்றும் மருத்துவ நிதி போன்றவற்றை சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் போராடிப் பெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். கேரளா, ஒரிசா போன்ற மாநிலங்களில் நமது நிறுவனம் லாபம் ஈட்டுவதைச் சுட்டிக் காட்டிய அவர் நமது பொருளாதாரப் பலன்களை அடைவதற்கு நமது மாநிலத்தையும் ஒரு ரூபாயாவது லாபம் ஈட்டுகின்ற மாநிலமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இன்னும் சில மாநிலங்களில் நாம் மாநில மாநாடுகள்கூட நடத்தவில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டிய அவர் அவை விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதையும் நினைவூட்டினார். ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் கே.ஜி.ஜெயராஜ் வாழ்த்துரையாற்றினார்.
          அவர்களைத் தொடர்ந்து உரையாற்றிய பொதுச் செயலர் தோழர் அபிமன்யு நியாயமாக நடந்து கொண்டதற்காகக் கொலைசெய்யப்பட்ட  காஸியாபாத் மாவட்டத்தின் மாவட்டச் செயலரின் குடும்பத்தினருக்கு நமது சங்கம் அவரது மறைவிற்குப் பின்னரும் எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டதுடன், கொலையாளிகள் தண்டனை பெறும்வரை நமது நடவடிக்கைகள் தொடரும் என்பதைக் குறிப்பிட்டார். புதிய அங்கீகார விதிகளின்படி என்எஃப்டி சங்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம் பற்றிய முணுமுணுப்பு இன்னும் சில தோழர்களிடம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, இன்றைய தொழிலாளர் விரோத உலகமயச் சூழலில் நாம் நம்முடைய போராட்டத்தின் ஒரு அங்கமாக அவர்களும் மாற்ற வேண்டியதன் தேவையை மீண்டும் வலியுறுத்தினார். கார்ப்பரேட் அலுவலகத்தில் இதுவரை எந்தப் போராட்டமும் நடைபெற்றதில்லை என்ற நிலையில் நாம் கார்ப்பரேட் அலுவலகத்தில் தர்ணாவிற்கான அரைகூவல் விடுத்ததும், நிர்வாகம் காவல்துறைக்கு பாதுகாப்புக் கேட்டுக் கடிதம் எழுதியது. நமது நிறுவன அலுவலகத்திற்குள் காவல்துறை நுழைவது தவறு. எங்களது சொத்துக்களின் மீது எங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை நிர்வாகத்திற்குச் சுட்டிக்காட்டி காவல்துறை பாதுகாப்பை ரத்துசெய்யச் செய்து, ஜனநாயக முறையில் கார்ப்பரேட் அலுவலகத்தில் தர்ணா நடத்தியதை நினைவு கூர்ந்தார். இரண்டாவது சங்கத்திற்கான அங்கீகாரம் கொடுக்கப்பட்ட சூழ்நிலையிலும்கூட நாம் கடந்த தேர்தலில் பெற்றதைவிட 2.3% வாக்குகள் அதிகம் பெற்றதைச் சுட்டிக் காட்டினார்.
          தொடர்ந்து அகில இந்தியத் தலைவர் தோழர் நம்பூதிரி மற்றும் நமது மாநிலத்தின் துணைச்செயலர் தோழர் இந்திரா ஆகிய இருவரின் ஒருங்கிணைப்பில் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டு விவாதங்களை தொகுத்துரைத்த பொதுச் செயலர் தோழர் அபிமன்யு பெண்கள் மீதான சீண்டல்களைத் தவிர்ப்பதற்கான முதல்படி அவர்கள் பொதுத்தளத்தில் பொதுப்பணிகளில் தங்களை இணைத்துக் கொள்வது என்றார். இன்னும் மாவட்டச் செயலர்களாக, மாநிலச் செயலர்களாக பெண்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதைக் குறிப்பிட்ட அவர், இந்தூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலர் முதல் அனைத்துக் கிளைச் செயலர்களும் என அனைவரும் பெண் தோழர்களாக இருப்பதைப் பாராட்டினார்.
          தமிழ் மாநிலப் பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் நமதுதோழர்கள் ரவீந்திரன், சமுத்திரக்கனி மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று மாநிலத்தின் சார்பாகப் பேசுவதற்கான ஆயத்தத்தில் தங்கள் கருத்துக்களை வழங்கினர்.




          இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சார்பாளர் விவாதங்களுக்கு நடுவே அனைத்திந்திய மாநாட்டின் மலரை அகில இந்தியத் தலைவர் தோழர் விஏஎன் நம்பூதிரி வெளியிட பொதுச் செயலாளர் தோழர் அபிமன்யு பெற்றுக் கொண்டார்.

         
 பிற்பகலில் ‘BSNLன் மறுமலர்ச்சியும் BSNLEUவின் பங்கும்என்ற தலைப்பில் அகில இந்தியத் தலைவர் தோழர் வி.ஏ.என். நம்பூதிரியின் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கம் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர் அனிமேஷ் மிஷ்ரா வரவேற்புரையுடன் தொடங்கியது. பொதுச் செயலர் தோழர் அபிமன்யு கருத்தரங்கினை நோக்கஉரையாற்றித் தொடங்கி வைத்தார்.

         
இயக்குநர் CFA திருமிகு என்.கே.குப்தா மற்றும் இயக்குநர் CM திருமிகு அனுபம் ஸ்ரீவத்சவ் ஆகியோர் நிர்வாகத் தரப்பில் தங்களுடைய கருத்தை முன்வைத்தார்கள். “BSNLஐ தற்போது இருக்கின்ற பங்கு விற்பனைகள் இல்லாத இதே நிலைமையில் தக்க வைப்பதே நிர்வாகத்தின் இன்றைய நிலையாக இருக்கின்றது. நிறுவனத்தை இழப்பிலிருந்து மீட்கும் முயற்சியில் உங்களது ஒத்துழைப்பும் அவசியமானதாக இருக்கின்றது. தென்னிந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் 50,000 ப்ராண்ட் பேண்ட் இணைப்புகளை நாம் இழந்திருக்கின்றோம். இப்படியான சூழல் என்பது தவிர்க்கப்பட வேண்டும்.  விரைவில் தரைவழித் தொலைபேசியில் வீடியோ கால் வசதி வரவிருக்கிறது. FTTHக்கான பணிகள் நிர்வாகத் தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் வெற்றிகரமாக்கித் தருவது உங்கள் கைகளில்தான் உள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை BSNLEU கொடுத்தால் அவற்றை நடைமுறைப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். 70,000 கோடி லாபம் ஈட்டுகின்ற நமது முயற்சி வெற்றியடைந்தால் வருகின்ற 2016 ஊதியக் குழுவிற்குப் பின்னர் நாம் தற்போது பெறுகின்ற ஊதியத்தைப் போல் இருமடங்கு பெறலாம். வை-மேக்ஸ்க்கு மாற்றாக விரைவில் wi-fi connectivity தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரத்திற்கான நாம் அரசாங்கத்திடம் செலுத்திய, நமக்குத் திரும்பி வரவேண்டிய தொகை இன்னும் வரவில்லை. தேவையான சூழலில் இந்த முயற்சியில் நீங்களும் எங்கள் உடன் இருப்பீர்கள் என்று நம்புகிறோம்என்றார்கள்.

         
 இயக்குநர்களின் உரையைத் தொடர்ந்து SNEAவின் பொதுச் செயலர் தோழர் செபாஸ்ட்டின், BTUவின் பொதுச் செயலர் தோழர் R.C.பாண்டே, TEPUவின் பொதுச் செயலாளர் R.வெங்கட்ராமன், ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் பிரகலாத்ராய் மற்றும் NFTEயின் துணைப்பொதுச் செயலர் சேஷாத்ரி ஆகியோர் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அவர்கள் “Tower Sharing”ல் நிர்வாகம் கடைப்பிடிக்கும் கவனமற்ற போக்கைச் சுட்டிகாட்டினர். BSNL & MTNL இணைப்பில் நிலவும் சாத்தியமற்ற தன்மையையும் இணைப்பினால் இரண்டு நிறுவனங்களுக்கும் ஏற்படும் பாதகங்களையும் சுட்டிக் காட்டினர். கிராமப்புற சேவைகளுக்காக நமக்குத் தரவேண்டிய இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. அவறைப் பெற முயற்சி செய்ய வேண்டும். களப்பணிகளுக்காகத் தரப்படுகின்ற பொருட்கள் உரிய காலத்தில் வழங்கப்படாமையையும் அப்பொருட்களின் தரமற்ற தன்மையைம் சுட்டிக்க காட்டினர். BSNLன் மேம்பாட்டிற்காக 2015 பிப்ரவரி 3 முதல் நடக்கவிருக்கின்ற காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க அறைகூவல் விடுத்தனர்.

         
பொதுச் செயலர் தோழர் அபிமன்யு பேசுகையில் BSNLக்காக பொருட்கள் வாங்குகின்ற சீன நிறுவனங்களான HUWAI மற்றும் Zetyee போன்றவைகளிடம்தான் பிற தொலைதொடர்பு நிறுவனங்களும் பொருட்களை வாங்குகின்றன. அவை கடனாக வாங்குகின்றோம். நாம் உடனடியாக பணம் கொடுத்து வாங்குகின்றோம். நிதிப் பற்றாக்குறையினால் இப்போதைக்குப் பொருட்கள் வழங்க இயலவில்லை என்ற சொற்களைத் தவிர்த்து அவசரத் தேவைகளுக்கு நமது நிறுவனமும் அவர்களிடம் கடனுக்குப் பொருட்கள் வாங்குவதில் எந்தத் தவறும் இருக்கப் போவதில்லை என்பதைக் குறிப்பிட்டார்.

           
தவிர்க்க முடியாத சூழலில் இடம் மாற்றப்பட்டு இரட்டிப்புச் செலவுகளுக்கு ஆளான வரவேற்புக் குழுவின் நிதிச் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக கீழ்கண்ட மாநிலங்கள் மேடையில் அறிவித்து நிதியைத் தந்தன. மாநிலங்களிடையே தொடரும் தோழமைக்கு அடையாளமாக இவற்றைக் காணவேண்டும்.

           
மகாராஷ்ட்டிரா ரூ. 50,000
           
பஞ்சாப்           ரூ. 1,00,000
           
கேரளம்          ரூ. 25,000
           
அந்தமான்       ரூ. 10,000 (100 உறுப்பினர்களை மட்டுமே கொண்டது)


7 ஆவது அகில இந்திய மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
தலைவர்                             : தோழர் பல்பீர் சிங்
உப தலைவர்கள்             : தோழர் அனிமேஷ் சந்ர மித்ரா (மே.வ)
                              தோழர் கே.ஆர். யாதவ் (ம.பி)
                              தோழர் பி.நாராயண் (ஜார்கண்ட்)
                              தோழர் ஜாகோம் (ம.பி)
                              தோழர் ஓம் பிரகாஷ் அமிஷ் (கொல்கத்தா)
பொதுச் செயலர்             : தோழர் பி.அபிமன்யு
துணைப் பொதுச் செயலர்கள் : தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி
                              தோழர் கே.சம்பத் ராவ் (ஆந்திரா)
                              தோழர் ஜான் மார்கஸ் (மகாராஷ்ட்ரா)
                              தோழர் எஸ். பிரதாப் குமார் (கேரளா)
                              தோழர் எம்.சி.பாலகிருஷ்ணா (கர்னாடகா)
                              தோழர் எஸ்.செல்லப்பா (தமிழ்நாடு)
பொருளாளர்                 : தோழர் சைபல் சென்குப்தா (கல்கத்தா)
உதவி பொருளாளர்  : தோழர் குல்தீப் சிங் (ஹரியானா)
அமைப்புச் செயலர்கள் : தோழர் ஆர்.எஸ். சௌகான் (NTR)
                              தோழர் சுனிதி சௌத்ரி (பீகார்)
                              தோழர் சுகவீர் சிங் (உ.பி)
                              தோழர் விஜய் சிங் (ராஜஸ்தான்)
                              தோழர் வி.கே.பகோத்ரா (குஜராத்)
                              தோழர்         (மகாராஸ்ட்ரா)
                              தோழர் எம்.விஜயகுமார் கேரளா
தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள் அனைவருக்கும் தஞ்சை மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்




























தோழமையுடன்
தஞ்சைBSNLEU மாவட்ட சங்கம் 

No comments:

Post a Comment