Monday 30 March 2015

பிஞ்சுகளையும் அச்சுறுத்தும் தீவிரவாதம்

பிஞ்சு குழந்தைகளையும் அச்சுறுத்துகின்ற தீவிரவாதத்தை அம்பலப்படுத்தும் புகைப்படம்<<<Click Here>>>

ஒப்பந்த ஊழியருக்கு நிலுவைத்தொகை

நமது மாநில ச்ங்கங்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஒப்பந்த ஊழியருக்கு முன் தேதியிட்டு தொழிலாளர் நல ஆணையர் நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும் என வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு<<<Click Here>>>

Thursday 26 March 2015

கடலூரில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்

கடலூர் மாவட்ட BSNL ஊழியர் சங்கமும், TNTCWU சங்கமும் இணைந்து நடத்திய மாவட்டம் தழுவிய சிறப்பு கருத்தரங்கம்<<<Click Here>>>

Monday 23 March 2015

BSNLEU 15வது அமைப்பு தினம்

விசாகப்பட்டனத்தில் 22-03-2001ல் துவங்கிய BSNL ஊழியர் சங்கம் இன்று ஆலமரமாய் தழைத்து ஒட்டுமொத்த BSNL,ஊழியர்கள் அதிகாரிகள் ,ஒப்பந்த ஊழியர்கள்,ஓய்வுபெற்றோர் அனைவரின் நலன்காக்கும் பேரமைப்பாக திகழ்ந்து வருகிறது,தஞ்சை மாவட்ட சங்கம் அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க அமைப்புதின வாழ்த்துகளை உரித்தாக்கிகொள்கிரது

Thursday 12 March 2015

JAC-ஆர்ப்பாட்டம்

இன்று 12.03.2015 மாலை 5.00 மணியளவில் பாலாஜி நகர் GM- அலுவலக வாயில் ஆர்ப்பாட்டம் கூட்டம் தோழர் பழனியப்பன் SNEA தலைமையில் நடைபெற்றது.நமது சங்க தோழர்கள் 50-பேர்க்கும் மேலாக மொத்தம் 100 -பேர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.பல்வேறு சங்க தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.நமது சங்க மாநில செயளர் தோழர் அ.பாபுராதகிருஷ்ணன் அவர்கள் வேலை நிறுத்தத்தின் அவசியம் பற்றி விரிவாக விளக்கி பேசினார்.BSNLEU மாவட்ட செயலர் தோழர் தெ.சுப்ரமணியன் அவர்கள் நன்றி கூறி கூட்டம் நிறைவடைந்தது.









தோழமையுடன்
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்

தஞ்சையில் இன்று விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் 12.03.2015 நடைபெற்றது

BSNLEU- விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்
தஞ்சை மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் தோழர் அ.இருதயராஜ் தலைமையில் பாலாஜி நகர் கம்யூனிட்டி ஹாலில் இன்று காலை 11.00மணியளவில் துவங்கியது.மாநில செயலர் தோழர் அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்சிறப்பு அழைப்பாலராக கலந்து கொண்டு BSNL-ஐ காப்பாற்ற வேண்டும்  ஏப்ரல்-20,21 தேதிகளில் நடைபெறப் போகும் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பது பற்றி விரிவாக உறையாற்றினார்.75-க்கு மேலாக தோழர்களும்,தோழியர்களும் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்றனர்.மாவட்ட செயலர் தோழர் தெ.சுப்ரமணியன் அவர்கள் தொகுப்புரை வழங்க .மாவட்ட பொருளர் தோழர் ரமணன் அவர்கள்  நன்றி கூறி செயற்குழு கூட்டம் நிறைவு செய்தார்.

 NFTE-யிலிருந்து நமது சங்கத்தில் நான்கு தோழர்கள் இணைந்தனர்.அவர்களுக்கு BSNLEUமாநில செயலர் தோழர் அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் பொன்னாடை போற்றி கவுரவைத்தனர் அவர்களை நமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும்,தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம் தெரிவித்துகொள்கிறது.தோழர்.வேதமணி அவர்கள் TM தஞ்சாவூர்,தோழர்.P.செல்வராஜ் அவர்கள் TM தஞ்சாவூர்,தோழர்.கரிகாலன் அவர்கள் TTA பேராவூரணி, தோழர்.ராஜகோபால் அவர்கள் TM பட்டுக்கோட்டை






தோழர்.வேதமணி அவர்கள் TM தஞ்சாவூர்

தோழர்.P.செல்வராஜ் அவர்கள் TM தஞ்சாவூர்

தோழர்.கரிகாலன் அவர்கள் TTA பேராவூரணி 

தோழர்.ராஜகோபால் அவர்கள் TM பட்டுக்கோட்டை


உறையாற்றியதோழர்.வேதமணி அவர்கள் TM தஞ்சாவூர்





தோழமையுடன் 
BSNLEU மாவட்ட சங்கம் தஞ்சை

பத்திரிக்கையாளர் சந்திப்பு

அகில இந்திய Forum அறைகூவலை ஏற்று இன்று (12.03.2015) சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது<<<Click Here>>>

LIC ஊழியர்கள் வேலை நிறுத்தம்

09.03.2015 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் LIC ஊழியர்களுக்கு ஆதரவாக தோள் கொடுப்போம்.<<<Click Here>>>

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை தமிழ் மாநில சங்கம் உரித்தாக்குகிறது.<<<Click Here>>>

உண்மையும் நேர்மையும் தேசபக்தியும் நிரம்பிய ஐ.மா.பா.!

உண்மையும் நேர்மையும் தேசபக்தியும் நிரம்பிய ஐ.மா.பா.! நன்றி - ஜூனியர் விகடன்<<<Click Here>>>

கண்டன ஆர்ப்பாட்டம்

பெரு முதலாளிகளுக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் பட்ஜெட்டில் சலுகை … ஏழை எளிய மக்களுக்கோ பட்ஜெட்டில் சுமை … மத்திய அரசை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்<<<Click Here>>>

பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் தலைவர்கள்

டெல்லி பேரணியின் இறுதியில்<<<Click Here>>

Friday 6 March 2015

சர்வதேச மகளிர் தினம்

           தற்சமயம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 102 வருடங்கள் முடிந்து விட்டன.
           ஃபிரெஞ்சுப் புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதிதத்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன.
           அப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணரத் தொடங்கினர்.
           பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன.
           1908 ஆம் ஆண்டு சுமார் 15,000  பெண்கள் தங்களுக்கு வேலைக்குத் தகுந்த சிறப்பான சம்பளம், குறைந்த நேரப் பணி மற்றும் வாக்குரிமை கேட்டு நியுயார்க் நகர வீதிகளில் வலம் வந்தனர். இந்நிகழ்ச்சி மகளிர் போராட்டம் என்பதைவிட சோஷியலிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே இருந்தது. 1913 ஆம் ஆண்டு வரை பிப்ரவரி மாத கடைசி ஞாயிறு தேசிய மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டது.
           1910 ஆண்டு கோபென்ஹேகன் நகரில் உழைக்கும் பெண்களின் மாநாடு நடைபெற்றது. அதில் ஜெர்மனி சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் ‘மகளிர் அலுவலக’த் தலைவராக இருந்த க்ளாரா செட்கின் (Clara Zetkin) ஒரு யோசனையை முன்வைத்தார். அதாவது ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அனுசரிக்கப்படவேண்டும்; அதில் பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்  என்பது அவரது யோசனை. இந்த மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து 100 பெண்கள் கலந்து கொண்டனர். எல்லோருமே ஒரு மனதாக இவரது யோசனையை வரவேற்றனர்.
           1911ம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி  முதல் முறையாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் அங்கீகாரம் பெற்றது. சுமார் ஒரு மில்லியன் பெண்களும் ஆண்களுமாக பெண்களுக்கு சம உரிமை கேட்டு ஒரு பேரணியாகத் திரண்டு பிரசாரத்திலும் ஈடுபட்டனர். துரதிர்ஷ்டவசமாக மார்ச் 25 ஆம் தேதி நியூயார்க் நகரில் ஏற்பட்ட ‘முக்கோண தீ விபத்து’ 140 உழைக்கும் மகளிரின் உயிரைப் பறித்தது. இவர்கள் அனைவரும் அமெரிக்காவுக்கு வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இந்தக் கொடும் சம்பவம் பெண்களின் உழைக்கும் சூழலைப்  பற்றிய மோசமான நிலையை உலகுக்கு அறிவித்தது. இதே ஆண்டில் உழைக்கும் மகளிர் Bread and Roses என்ற போராட்டமும் நடத்தினர். இதில் பங்கு பெற்ற மகளிர் We want Bread but we want roses, too என்று எழுதப்பட்ட கொடிகளை தாங்கி ஊர்வலம் சென்றனர்.
           1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8  சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண்களை வாழ்த்துவதுடன் நில்லாமல் அவர்களின் உரிமைப் போராட்டத்தில் வர்க்க உணர்வுடன் கைகோர்க்க BSNLEU அறைகூவி அழைக்கிறது.