Monday 28 July 2014

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் 29-07-2014


"இன்ஷா அல்லாஹ்"

"மழையும் வெயிலும் மண்ணுக்கு வேண்டும்
ஈகையும்,நட்பும் மனிதனுக்கு வேண்டும்"

உலகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்கள் ,தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் 


 ***இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்***
பார்க்க படிக்க<<<Click Here>>>



"என்னப் படைச்சவனே அல்லாஹ் ...அல்லாஹ் ..
எல்லாம் தெரிஞ்சவனே சுபுஹானல்லாஹ் ..
அல்லாஹ் ...யா அல்லாஹ்...அல்லாஹ்..."


வாழ்த்துக்களுடன்
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்

Sunday 27 July 2014

7-வது மாவட்ட மாநாடு


சிறப்பு மிகு பட்டுக்கோட்டை மாவட்ட மாநாடு
அன்பாந்த தோழர்களே,

நமது BSNL ஊழியர் சங்கம் 7-வது மாவட்ட மாநாடு 2014 ஜுலை-26 பட்டுக்கோட்டை இராமச்சந்திரா திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.அந்த மாநாட்டினை மாவட்ட தலைவர் தோழர் A.இருதயராஜ் தலைமையேற்று நடத்தினார்.

அன்று நிகழ்ச்சியில்தேசியக்கொடியை மாவட்ட பொருளர் தோழர்.S.N.செல்வராஜ் ஏற்றிவைக்க.மாநில செயலர் தோழர்.S.செல்லப்பா BSNLEU அவர்கள் நமது சங்கக்கொடியினை அதிர்வேட்டுக்கள் முழங்க பலத்தகோஷ்ங்களுக்கிடையே ஏற்றிவைத்தனர்.கிளைச் செயலர் தோழர் D.அசோகன் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் கிளை பொருளாளர் தோழியர் M.கலைச்செல்வி அவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாநில உதவிச் செயலர்தோழர்.A.பாபுராதாகிருஷ்ணன் BSNLEUஅவர்கள் மாநாட்டை முறையாக துவக்கிவைத்து சிறப்புறையில் நமது சங்கத்தின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.அதற்க்கு பின்னர் பேசிய மாநில செயலர் தோழர்.S.செல்லப்பா  BSNLEU அவர்கள் நமது BSNL வளர்ச்சியை பற்றியும், நாம் செய்த சாதனைகள் பற்றியும்,நிர்வாகத்திற்க்கு பல கோரிக்கைகளை முன் வைத்ததையும்,ஒப்பந்ததொழிலாளர்கள் பிரச்சனைகளையும் விளக்கிபேசினார்.பின்னர்

தோழர்.R.புண்ணியமூர்த்தி,தலைவர்,தஞ்சைகோட்டம்,காப்பீட்டு ஊழியர்சங்கம்,
தோழர்.P.பக்கிரிசாமி(AIBDPA)தலைவர்,
தோழர்.T.பன்னீர்செல்வம்,மாவட்டச்செயலர்(NFTEBSNL),
தோழர்.N.வீரபாண்டியன்,மாநிலச்செயலர்,AIBSNLEA,
தோழர்.K.பழனியப்பன்,மாவட்டச் செயலர்,SNEA(I), திரு.S.விஜயகுமார்,DGM(CFA)தஞ்சை. திருமதி.S.சந்திரகுமாரி,DGM(CM) தஞ்சை. திரு.M.மாரியப்பன்,DGM(Fin)தஞ்சை.
தோழர்.N..ஜெயராமன்,SDE(DSA-OSS)3G CO-ORD தஞ்சை
தோழர்S.C.ராஜேஸ்வரன்,மாவட்டச் செயலர், SNATTA தஞ்சை
ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி விளக்கி பேசினார்கள்.

அதற்க்குப் பின்னர் மாவட்ட செயலாளர் வைத்த செயல்பாட்டு அறிக்கையினையும், மாவட்ட பொருளாளர் தோழர்.S.N.செல்வராஜ் வைத்த வரவு செலவு அறிக்கையினையும், தோழர்களின் விவாதத்திற்க்கு பின்னர் மாநாடு முழுமையாக அங்கீகரித்தது. மாநில செயலர் தோழர்.S.செல்லப்பா BSNLEU அவர்களின் தொகுப்புரைக்கு பின்னர் தோழர்.R.மகேந்திரன்,மாநில உதவி பொருளர் BSNLEU. தோழர் S.நடராஜா,மாநில தணிக்கையாளர் AIBDPA,சென்னை. ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் தோழர்N.சத்தியானந்தம்TNTCWU தஞ்சை. ஆகியோர் நமது சங்கத்தை பற்றியும் நமது சங்கத்தின் செயல்பாடுகள் நாம் ஒவ்வொரு தோழர்களும் என்ன செய்வேண்டியதுபற்றியும், ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனைகளை பற்றியும் விளக்கிபேசினார்கள்.

 தீர்மானங்களை மாநாட்டில் நிறைவேற்றிய பின்னர்,நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் மாவட்ட தலைவராக தோழர் A.இருதயராஜ், மாவட்ட செயலாளராக தோழர் D.சுப்ரமணியன்,மாவட்ட பொருளாளராக தோழர் R.ரமணன் ஆகியோரை உள்ளடக்கிய நிர்வாகிகள் ஏகமனதாகதேர்ந்தெடுக்கப்பட்டனர். 

பின்னர் பணி ஒய்வு பாராட்டு விழா  மாவட்ட பொருளாளர் தோழர்.S.N.செல்வராஜ் BSNLEU அவர்களுக்கும்,மாவட்ட உதவி தலைவர் BSNLEUதோழர் M.பழனியப்பன் அவர்களுக்கும்பணி ஒய்வு பாராட்டு விழா நம் மாநில செயலர் தோழர்.S.செல்லப்பா BSNLEU அவர்கள் வாழ்த்தி பொன்னாடை போற்றி கவுரவைத்தார்கள்.  

இந்த மாநாட்டை கிளை தலைவர் K.பன்னீர்செல்வம்,  வரவேற்புக்குழு,அவர்கள் நன்றியுரை கூறி நிறைவு செய்தார். 

இந்த சிறப்பு மிகு மாநாட்டில் நிரந்த ஊழியர்கள்,ஒப்பந்த தொழிலாளர்கள்,என 150க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.மிக அற்புதமான மாவட்டச் சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை கிளைச் சங்கத்தையும் தமிழ் மாநிலச் சங்கம் மனதார பாராட்டியது. புதிய மாவட்ட நிர்வாகிகள் நமது சங்கத்தை மென்மேலும் உயர்த்திக் கொண்டு செல்ல தமிழ் மாநிலச் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.






































வாழ்த்துகளுடன்
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்.....


Wednesday 23 July 2014

GPF

"GPF" என்ற இந்த சொல் இன்று அதிகம் பேசக்கூடிய சொல்லாகிவிட்டது . இது வருமா ! வராதா ! வந்தால் எத்தனை சதவிகிதம் .இது விசயமாக நேற்று நமது CMD அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களுடன் மூத்த பொது மேலாளர் (BFCI) அவர்களை இன்று (23-07-2014) சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது  GPF payment தாமதம் ஆவதற்கு கார்போரேட் அலுவலகத்தில் பணமே இல்லையாம் (NIL Balance). வரும்  வெள்ளிகிழமைக்குள் நிதி சேர்ந்தால் போதிய ஒதுக்கீடு செய்யப்படுமாம் . அது சாத்தியம் இல்லை என்றால் வரும்  சம்பளத்திற்கான   நிதி ஒதுக்கீட்டுடன்  "GPF" க்கும்   சேர்ந்து நிதி ஒதுக்கீடு வரும்  என அவர் கூறியுள்ளார 

கேடர் பெயர் மாற்றம்

கேடர் பெயர் மாற்றத்திற்கான  கமிட்டியின் கூட்டம் இன்று (23-07-2014) நடைபெற்றது . நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு ,நமது தலைவர் தோழர் V A N நம்பூதிரி ,நமது துணை பொது செயலர் தோழர் .அனிமேஷ் மித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர் . நிர்வாகத்தின் தரப்பில் கலந்து கொண்ட  திருமதி மது அரோரா மூத்த பொது மேலாளர் (மறு சீரமைப்பு ) கூறியதாவது . டெலிகாம் மெக்கானிக் மற்றும் RM கேடருக்கான பெயர் மாற்றத்தில் ஏற்கனவே உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாகவும் அதன் படி டெலிகாம் மெக்கானிக் ஊழியர்கள் டெலிகாம் டெக்னீசியன்  என்றும் RM ஊழியர்கள் டெலிகாம் உதவியாளர் (Telecom Assistant) என்றும் அழைக்கப்  படுவர். சீனியர் TOA மற்றும் TTA  கேடருக்கான பெயர்களை 
Sr. TOA------------------ Telecom Office Associate என்றும் TTA வை ------- Telecom Engineering Associate என்றும் நிர்வாகம் முன்மொழிந்ததை நமது சங்கம் ஏற்று கொள்ளவில்லை   
Sr.TOA கேடரை டெலிகாம் அசோசியேட்  ஆபீசர் என்றும் TTA கேடரை ஜூனியர் இஞ்சினியர் என்றும் மாற்றம் செய்ய நமது BSNLEU சங்கம் வலியுறுத்தி உள்ளது .  இது விசயமாக  முடிவுகள் எட்டப்படவில்லை 
பட்டுக் கோட்டையில் வரவேற்கத்
காத்திருக்கிறோம் தோழர்களே...


Monday 21 July 2014

ஒப்பந்த ஊழியர் சங்கம் புதிய கிளை துவக்கம் 19-07-14

ஒப்பந்த ஊழியர் சங்கம் பாபநாசம் தொலைபேசி நிலையத்தில் 19-07-2014 அன்று மாலை  3-வது புதிய கிளை துவக்கம்    ஒப்பந்த ஊழியர் மாவட்ட  தலைவர் தோழர் J.ரமேஷ் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது ஒப்பந்தஊழியர் மாவட்டசெயலர் தோழர்N.சந்தியவானந்தம் அவர்கள் அனைவரையும்வரவேற்றுவரவேற்புரை நிகழ்த்தினார். ஒப்பந்தஊழியர் மாநில குழு உறுப்பினர் R.முருகேசன் தொகுப்புரைவழங்கி பேசினார். நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர் சங்கவழிகாட்டுதலுடன் ஒப்பந்த ஊழியர் தோழர்களும்,தோழியர்களும், பெருந்திரளாககலந்துக் கொண்டு புதிய கிளை துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர் மாவட்ட செயலர் தோழர் D.சுப்ரமணியன் மற்றும் மாவட்ட தலைவர் A.இருதயராஜ் அவர்கள் கலந்துக்கொண்டனர்.





புதிய நிர்வாகிகள் தேர்வு

தோழர்கள்:-

தலைவர்             M.முருகானந்தம் / PSM
உ.தலைவர்          C.T.சங்கர் /ALG
கி.செயலர்            K.ராஜகோபால் / AYP
உ.செயலர்            K.பாலசிங்கபிரபாகர் / PSM
உ.செயலர்            M.ரஹமத்துல்லா / PSM
கி.பொருளாளர்       S.குருமூர்த்தி / PSM
கி.பொருளாளர்       N.சிவானந்தம் / KPS
அமைப்பு செயலர்    S.கணேசன்   / MLT
அமைப்பு செயலர்    அலெக்ஸ்பாண்டியன் / AMP
அமைப்பு செயலர்    A.குணசேகரன்  / AMP

ஒப்பந்தஊழியர்புதியகிளை  தேர்ந்தெடுத்த புதிய நிர்வாகிகள்  அனைவருக்கும் 
தஞ்சைBSNLEU மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகின்றது.


வாழ்த்துக்களுடன்
BSNLEU மாவட்டசங்கம்

ஒரு நல்ல செய்தி

நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் நெடு நாள் கோரிக்கையான TSM சேவையை கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும் என்பதை கார்போரேட்  அலுவலகம் ஏற்று கொண்டு உத்தரவை வெளியிட்டு விட்டது .இவ் உத்தரவு படி சர்வீஸ் புக் மற்றும் HRMS இல் TSM சேவை பதிவு செய்யப்படும்.பணி ஓய்வு  பெறும்  போது பென்ஷன் கணக்கிடுவதில் TSM  சேவையில் 50% எடுத்து கொள்ளப்படும் .உத்தரவு படிக்க <<<Click Here>>>

BSNLEU’s Committee on merger of BSNL and MTNL.

Meeting of BSNLEU’s Committee on merger of BSNL and MTNL.

A meeting of BSNLEU’s Committee on merger of BSNL and MTNL took place at New Delhi today. The meeting is attended by all the Committee members viz., com. V.A.N. Namboodiri, President, com P. Abhimanyu, GS, com. Animesh Mitra, Dy.GS, com. P. Asokababu, Vice President, com. Adhir Kumar Sen, Vice President, com. R.L. Moudgil, AGS, com. Swapan Chakraborty, AGS, com. S.C. Bhattacharya, treasurer, com. S. Chellappa, CS, Tamil Nadu, com. K. Mohan, CS, Kerala, com. N.K. Nalawade, CS, Maharashtra and com. M.C. Balakrishna, Organising Secretary (CHQ). 

Com. V.A.N. Namboodiri, President, presided over the meeting, which was held at K.G. Bose Bhawan.Com. P. Abhimayu, GS, welcomed the Committee members and made a brief introduction of the subject, in the back ground of the changed political scenario. Com. P. Asokababu, Vice-President (CHQ) and convener of the Committee presented the note for discussion. 

The Committee members deliberated on the pros and cons of the issue of merger of BSNL and MTNL. Finally, the Committee came to the unanimous conclusion that the government should not go ahead with the merger of BSNL and MTNL, without settling the issues related to disinvestment and financial liability of MTNL, HR issues, etc. 

Com. P. Abhimanyu, GS finally summed up the discussion and thanked all the committee members for sparing their valuable time and coming to participate in the meeting.<<<View Photo>>>




Sunday 20 July 2014

சுற்றறிக்கை எண்:157

BSNL-MTNL இணைப்பு தொடர்பான BSNL ஊழியர் சங்க கூட்ட முடிவுகளும், FORUM கூட்ட முடிவுகளும்.<<<Click Here>>>

Saturday 19 July 2014

பாபநாசம் கிளை மாநாடு 19-07-2014





BSNL ஊழியர் சங்கம்

தஞ்சை மாவட்டம்

*******************************************
பாபநாசம் கிளைமாநாடு

   19-07-2014



கிளைமாநாடு 19-07-2014 அன்று பாபநாசம்  தொலைபேசி
அலுவலகத்தில்  கிளை தலைவர் தோழர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.கிளை செயலர் தோழர் ப.மாணிக்கம் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.கிளைசெயலர் அனைவரும் அவர்களுடைய உரை வழங்கினார்கள்.விவாதங்களுக்கு பின்னர் மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கி பேசினார்.

 சங்கவழிகாட்டுதலுடன் 

தோழர்களும்,தோழியர்களும் மற்றும் ஒப்பந்த 

ஊழியர்களும் பெருந்திரளாக கலந்துக் 

கொண்டு கிளைமாநாடு சிறப்பாக 

நடைபெற்றது.

கீழ்க்கண்டவாறு

  ஆண்டரிக்கை மற்றும் வரவு - செலவு கணக்கு சமர்ப்பித்தல்.புதிய நிர்வாகிகள் தேர்வு,

நடந்து முடிந்த கிளைமாநாட்டில் புதிய நிர்வாகிகள்

புதிய நிர்வாகிகள் தேர்வு

தோழர்கள்:-

கிளை:    தலைவர் தோழர் லெ.இளஞ்செழியன் TM/PSM

 செயலர் :  தோழர் பெ.மாணிக்கம் TM/PSM

 பொருளர்: தோழர் அ.விஸ்வநாதன் TM/PSM


 கிளைமாநாட்டில்  தேர்ந்தெடுத்த புதிய நிர்வாகிகள்  அனைவருக்கும் தஞ்சைBSNLEU மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகின்றது.


வாழ்த்துக்களுடன்
BSNLEU மாவட்டசங்கம்

சுற்றறிக்கை எண்:156

JAC போராட்ட அறைகூவல்<<<Click Here>>>

மகளிர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழ்நாடு BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு மாநிலக் குழு கூட்ட முடிவுகள்<<<Click Here>>>

Joint Circular

17-7-14 MRS Committee Meeting - Joint Circular<<<Click Here>>>

Saturday 12 July 2014

GM(O),CTMX,DE(RM),கிளைமாநாடு

BSNL ஊழியர் சங்கம்
தஞ்சை மாவட்டம்
*********************************************
கிளைமாநாடு

அறிக்கை எண்:                                                                              12-07-2014



 தஞ்சையில் மூன்றுகிளைகள் இணைந்து நடத்தும் கிளைமாநாடு


கிளைமாநாடுகள் 12-07-2014 அன்று தஞ்சை மாவட்ட சங்க 
அலுவலகத்தில் CTMX கிளை தலைவர் தோழர் S.N.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட செயலர் தோழர் D.சுப்ரமணியன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.கிளைசெயலர் அனைவரும் அவர்களுடைய உரை வழங்கினார்கள்.விவாதங்களுக்கு பின்னர் மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கி பேசினார்.

 சங்கவழிகாட்டுதலுடன் தோழர்களும்,தோழியர்களும் பெருந்திரளாக கலந்துக் கொண்டு கிளைமாநாடு சிறப்பாக நடைபெற்றது.

கீழ்க்கண்டவாறு
  ஆண்டரிக்கை மற்றும் வரவு - செலவு கணக்கு சமர்ப்பித்தல்.புதிய நிர்வாகிகள் தேர்வு,

நடந்து முடிந்த மூன்று கிளைகள் மாநாட்டில் புதிய நிர்வாகிகள்

புதிய நிர்வாகிகள் தேர்வு

தோழர்கள்:-

GM(O) கிளை:தலைவர் தோழர் S.சிவக்குமார் SS(O)/TNJ

                            செயலர்   தோழர் R.பன்னீர்செல்வம் SSS(O)/TNJ

                            பொருளர் தோழர் M.ஏகாம்பரம் TM/TNJ

CTMX கிளை:தலைவர் தோழர் G.கண்ணன் TM/TNJ

                            செயலர்  தோழர் L.கலையரசன் TM/TNJ

                            பொருளர் தோழர் S.மனோகரன் TS(O)/TNJ


DE(RM)கிளை:தலைவர் தோழர் M.தாய்மாணவன் TM/TNJ

                             செயலர்   தோழர் A.ஜெயக்குமார் TM/SEG

                             பொருளர் தோழர் V.கணகு TM(O)/TVY


 கிளைமாநாட்டில்  தேர்ந்தெடுத்த புதிய நிர்வாகிகள்  அனைவருக்கும் தஞ்சைBSNLEU மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகின்றது.


வாழ்த்துக்களுடன்
BSNLEU மாவட்டசங்கம்